கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் வெள்ளை சாயம் பூசி போராட்டத்தில் ஈடுபட்டார்.
கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் ரஞ்சித் என்பவர் தான் கறுப்பு நிறத்தில் இருப்பதால் காவல்துறையினர் கைது செய்யலாம் என கருதி, வெள்ளை சாயம் பூசி போராட்டம் நடத்தினார்.
கேரளாவில் முதல்வரும், பிற அமைச்சர்களும் மக்களிடம் நேரடியாக சென்று மனுக்கள் பெரும் நவ கேரள சதாஸ் நிகழ்ச்சி நடை பெற்று வரும் நிலையில் கேரளாவில் ஒரு சில இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் செல்லும் போது அவருக்கு எதிராக சில கட்சி அமைப்புகள் கறுப்புக்கொடி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குழுவினர் தற்போது கொல்லம் மாவட்டத்தில் வர இருந்த நிலையில் முற்றிலும் மாறுபட்ட போராட்டத்துடன் இளைஞர் ஒருவர் களமிறங்கினார். இந்த சம்பவம் கொல்லம் மாவட்டம் தளவூரில் நடந்துள்ளது.
முதலமைச்சருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக தளவூர் பஞ்சாயத்து உறுப்பினரும் பாஜக பிரமுகருமான
ரஞ்சித் உடல் முழுவதும் வெள்ளை பெயின்ட் பூசி சம்பவ இடத்துக்கு சாலைக்கு வந்தார்.
கறுப்பு நிறத்தில் இருப்பதால், முதல்வர் செல்லும் போது காவல்துறையினர் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்நிலையில் உடல் முழுவதும் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளதாகவும் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.