அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தமது X பதிவில், அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது.
தமிழகத்தின் உயர் கல்வி துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இது நாள் வரை கோலோச்சிக் கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களை கொள்ளையடித்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தீர்ப்பு திராவிட மாடலுக்கு கிடைத்த சம்மட்டி அடி. மக்கள் பணத்தில் மாளிகை கட்ட நினைத்தால், சிறைச்சாலைக்கு தான் செல்ல வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.
தொடர்ந்து ஏழை,எளிய மக்களை கிண்டல், கேலி செய்து வந்தவரை இந்த தீர்ப்பு மாற்ற வேண்டும். ‘ஓசி, ஓசி’ பஸ்ல போறீங்க என சொன்னவருக்கு இனி சிறையில் வழங்கும் உணவே ‘ஓசி’ தான் என்று நினைத்து பார்க்கட்டும். ஊழல்வாதிகள் ஒழியட்டும். நேர்மையாளர்கள் நிமிரட்டும் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர் @KPonmudiMLA யை குற்றவாளி என அறிவித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது. தமிழகத்தின் உயர் கல்வி துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இது நாள் வரை கோலோச்சிக் கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து மக்களை கொள்ளையடித்து கொண்டிருந்த நிலையில், இன்றைய தீர்ப்பு திராவிட மாடலுக்கு…
— Narayanan Thirupathy (@narayanantbjp) December 19, 2023