மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!
Sep 13, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்!

மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 04:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இதையடுத்து, இன்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஐதராபாத் பப்ளிக் பள்ளியின் நூற்றாண்டு விழா கலந்துகொண்டார். அப்போது பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, “மைக்ரோசாப்ட் சி.இ.ஐ. சத்யா நாதெல்லா போன்ற சிறந்த முன்னாள் மாணவர்களை உருவாக்கியதற்காக ஐதராபாத் பப்ளிக் பள்ளியை பாராட்டுகிறேன்.

ஐதராபாத் பப்ளிக் பள்ளி, மாணவர்களை பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வைக்கிறது. இது மாணவர்களிடையே விமர்சன சிந்தனையை ஊக்குவிப்பதற்கு ஊக்கமளிக்கிறது என்பதை அறியும்போது மகிழ்ச்சியளிக்கிறது.

மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் திறமையாக இருந்தால் போதாது. உணர்வு ரீதியாகவும் திறமையாக இருக்க வேண்டும். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் வளர்க்கப்பட வேண்டும்.

இதற்கு ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். அதேசமயம், மாணவர்களும் தங்களது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

முன்னதாக, தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “மாணவர்கள் விளையாட்டில் ஊக்குவிக்கப்பட வேண்டும். வகுப்பறைக்கு வெளியேயும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை நினைவு கூர விரும்புகிறேன். புதிய தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான உணர்விற்கு ஐதராபாத் பப்ளிக் பள்ளி உரிய முக்கியத்துவம் அளிக்கிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தனாசாரி அனசுயா, கல்வித்துறை செயலாளர் புர்ரா வெங்கடேசன், ஐதராபாத் பப்ளிக் பள்ளி சொசைட்டி தலைவர் குஸ்தி ஜெ நோரியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதேபோல, பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Droupadi MurmuPresidentTelanganaHyderabad Public School
Share
Tweet
SendShare
Previous Post

திராவிட மாடலுக்கு சம்மட்டி அடி – நாராயணன் திருப்பதி கருத்து!

Next Post

ரோம் எரியும் போது ஃபிடில் வாசித்த நீரோ மன்னர் போல் முதல்வர் ஸ்டாலின்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies