தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி காட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த விரக்தியில், பிரதமர் மோடியை எதிர்கட்சியினர் அவமதித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. மிசோராமில் மாநில கட்சியான சோரம் மக்கள் இயக்கம் வெற்றிபெற்றது.

அதேசமயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட பா.ஜ.க., ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பறித்திருக்கிறது. இது இண்டி கூட்டணிக் கட்சிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூழலில், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கி விட்டது. இதனால், எந்த விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடலாம் என்று எதிர்கட்சிகள் காத்திருந்த நிலையில், பாதுகாப்பு மீறல் சம்பவம் அரங்கேறியது.

இதையடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்தை வைத்து இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும், இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் மீது குற்றம்சாட்டின. இதனால், இரு அவைகளிலும் 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று மத்திய அரசுக்கு எதிராக கைகளில் பதாகைகளை ஏந்திவாறும், பிரதமர் மோடியின் போட்டோவை வைத்துக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக எதிர்கட்சியினர் பிரதமர் மோடியை அவமதித்து வருவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக, பிரஹலாத் ஜோஷி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை மக்கள் ஏற்றுக்கொண்டதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இதனால் எதிர்கட்சியினர் விரக்தியடைந்து இருக்கின்றனர்.

இது எதிர்கட்சியினரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். மோசமான முகமூடியை அணிந்து பிரதமர் மோடியை அவமதிப்பு செய்கின்றனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமரின் மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை பயன்படுத்துகின்றனர்.

எதிர்கட்சியினரின் இந்த செயல்களை ஒட்டுமொத்த அவையும் கண்டித்திருக்கிறது. பிரதமரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Opposition membersfrustratedInsulting PM ModiPrahalad Joshi
ShareTweetSendShare
Previous Post

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள்: மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

Next Post

அக்டோபர் வரை 72 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வருகை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies