ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Oct 22, 2025, 04:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Web Desk by Web Desk
Dec 20, 2023, 11:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கொலராடோ நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற்று 4 ஆண்டுகள் அதிபராக பதவி வகித்தார். ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியைத் தழுவினார். ஆனால், அவர் தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார்.

இந்த சூழலில், அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது, ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், போலீஸாருக்கும், ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும், அதிபர் பதவியில் தோல்வியுற்ற பின்னர் வெள்ளை மாளிகையை காலி செய்த டொனால்ட் ட்ரம்ப், முக்கிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க சட்டப்படி அதிபராக இருந்தவர்கள் பதவிக் காலத்தில் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் தேசிய ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்கண்ட போராட்டத்தில் டொனால்டு ட்ரம்ப்புக்கு பங்கு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு, அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

மேலும், குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குச்சீட்டிலும் ட்ரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது. அப்படியே இடம் பெற்றாலும் அவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் செல்லாது என்று தெரிவித்திருக்கிறது. எனினும், அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடை விதிக்கப்படவில்லை. மேலும், இத்தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வரை தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Tags: courtamericaFormer PresidentDonald Trump
ShareTweetSendShare
Previous Post

ஒரே பாலின தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கலாம்!

Next Post

வெள்ளம் பாதித்த பகுதிகள்! – இந்திய கடலோர காவல்படை மீட்பு பணிகளில் தீவிரம்!

Related News

டி.கே.சிவக்குமாரை சந்தித்த தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா!

புதுக்கோட்டை உழவர் சந்தையை சூழ்ந்த மழைநீர் – விவசாயிகள், பொதுமக்கள் அவதி!

மோடியுடன் வர்த்தக பிரச்னைகள் குறித்து பேசினேன் – டிரம்ப்

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ராஜபாளையம் அருகே வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies