2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனை எண்ணிக்கையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிசான்ராவ் கரத் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினருடனும் அரசு மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் மின்னணு பணப்பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன என மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிசான்ராவ் கரத் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
2017-18-ம் நிதியாண்டில் 2,071 கோடியாக இருந்த மின்னணு பணப்பரிவர்த்தனையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 45 சதவீதம் அதிகரித்து 2022-23-ம் நிதியாண்டில் 13,462 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறினார். நடப்பு 2023-24ம் நிதியாண்டில், 11.12.2023 வரை மின்னணு பணப்பரிவர்த்தனையின் எண்ணிக்கை 11,660 கோடியை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.