தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 288 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 6 பேருக்கும், கோவையில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 பேருக்கும், நாமக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 89 ஆக உள்ளது. தமிழகத்தில் நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.