திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் கோவை இல்லம் மற்றும் கல்லூரியில் கர்நாடகா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிசாமிக்கு கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் முறைகேடு நடைபெறுவதாக கர்நாடகா போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக கர்நாடகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக போலீசார் 15 பேர் கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமி இல்லத்தில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் கோவை பீளமேட்டில் உள்ள அவரது கல்லூரியிலும் போலீசார் சோதனை நடத்தினர்.