அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!
Sep 12, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அணுசக்தித் திறனை 7,480 மெகா வாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகா வாட்டாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், கேள்வி நேரமும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், கேள்வி நேரத்தின்போது அணுசக்தி தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார்.

அதில் அமைச்சர் ஜிதேந்திர சிங், “2013-14-ல் அணுமின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு 35,334 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த மின் உற்பத்தி 2022-23-ல் 46,982 மில்லியன் யூனிட்டாக அதிகரித்திருக்கிறது. அதேபோல, 2013-14-ல் 4,780 மெகா வாட்டாக இருந்த நிறுவப்பட்ட அணுமின் திறன், தற்போது 7,480 மெகா வாட்டை எட்டி இருக்கிறது.

தற்போது 23 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான், தமிழகம், ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 8,000 மெகா வாட் திறன் கொண்ட 10 அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட 10 அணு உலைகள் தொடர்பான திட்டத்திற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை, 2031-32-க்குள் படிப்படியாக முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் அணு மின் உற்பத்தி தொடர்ந்து சிறந்த பாதுகாப்பை வெளிப்படுத்தி வருகிறது.

2070-க்குள் நிகர பூஜ்ஜிய பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கு, அணுசக்தி திறனை விரிவாக்குவது நாட்டின் ஆற்றல் மாற்றத்திற்கு உதவும். மேலும், டி.பி.ஐ.ஐ.டி. ஸ்டார்ட்-அப் இந்தியா போர்ட்டலின்படி, விண்வெளி ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 2014-ல் ஒன்றிலிருந்து 2023-ல் 189 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த ஆண்டு இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்களில் முதலீடு 124 மில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது. இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தின் தற்போதைய அளவு சுமார் 8.4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் 2 முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.

இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ன் அமலாக்கத்தின் மூலம் இந்திய விண்வெளி 2033-க்குள் 44 பில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை அடைய முடியும்” என்றார்.

Tags: Parliamentjitendra singhnuclear power
Share
Tweet
SendShare
Previous Post

சச்சினின் 14 வருடச் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்!

Next Post

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் போலீசார் சோதனை!

Related News

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies