பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 78 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு!
Mar 15, 2026, 08:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 78 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு!

மக்களவையில் அமைச்சர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டங்களின் கீழ், 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த சூழலில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “குடிசைவாசிகள் உட்பட நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து தகுதியுள்ள குடும்பங்களுக்கும், பயனாளிகளுக்கும் வீடுகள் கட்டுவதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி செய்கிறது.

2023 டிசம்பர் 4-ம் தேதி நிலவரப்படி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா நகர்ப்புறத் திட்டத்தின் கீழ், 1.19 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதில், இதுவரை 78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நாட்டிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 85,066 கோடி ரூபாய் மத்திய உதவியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. இந்த 2 நகரங்களிலும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்த, டெல்லி மற்றும் மேற்குவங்க முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்க சபாநாயகர் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என்றார்.

அதேபோல, பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய அரசு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் ஏற்கவில்லை என்று விமர்சித்தார்.

Tags: ParliamentHardeep Singh PuriAyushman Bharat YojanaDelhi and Kolkata
ShareTweetSendShare
Previous Post

பொன்முடி வகித்த இலாகா ராஜகண்ணபனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு : ஆளுநர் ஒப்புதல்!

Next Post

தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வோடு கல்வி நிறுவனங்கள் முன்னேற வேண்டும்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies