அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2020 – 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட டொயோட்டா கேம்ரி, ராவ்4, சியன்னா மற்றும் லெக்ஸஸ் ஆர்எக்ஸ்350 மற்றும் இஎஸ்350 உள்ளிட்ட பல மாடல் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது.
திரும்பப் பெறப்படும் வாகனங்களில் முன்பக்க பயணிகள் இருக்கையில், சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை முறையற்ற முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த சென்சார்கள் ஷார்ட் சர்க்யூட் ஆகலாம். இதன் காரணமாக, ஏர்பேக் சிஸ்டம் முன்னாடி இருப்பவரின் சரியான எடையைக் கண்டறியாது மற்றும் விபத்துக்களில் பயன்படாது.
டொயோட்டா மற்றும் லெக்ஸஸ் டீலர்கள் சென்சார்களைப் பரிசோதித்து, தேவைப்பட்டால் உரிமையாளர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல், மாற்றுவார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் திரும்பப் பெறப்படுமா என்பதை டொயோட்டா நிறுவனம் தெரிவிக்கும்.