மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதாக்கள் காலனித்துவ கால சட்டங்களின் முடிவைக் குறிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,
மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்றும், பொது சேவை மற்றும் நலனை மையமாகக் கொண்ட சட்டங்களுடன் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது என்றார்.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதீய சாக்ஷ்ய ஆதினியம் ஆகிய மூன்று மசோதாக்களை நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் 1860 ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டம், 1898 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1872 ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை மாற்றும்.
இந்த மசோதாக்கள் சீர்திருத்தத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும், மேலும் அவை தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் அறிவியலை மையமாகக் கொண்டு நமது சட்ட, காவல் மற்றும் விசாரணை அமைப்புகளை நவீன யுகத்திற்கு கொண்டு வருகின்றன.
இந்த மசோதாக்கள் சமூகத்தின் ஏழைகள், விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவித்தார்.
இந்த மசோதாக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், பயங்கரவாதம் குற்றங்கள் ஆகியவற்றை பெரிதும் குறைக்கப்படுகின்றன என்று கூறினார்.
நாடு தேசத்துரோகத்தின் காலாவதியான பிரிவுகளுக்கு விடைபெற்றுள்ளது என்று கூறினார். அம்ரித் காலில், இந்த சட்டச் சீர்திருத்தங்கள் இந்தியாவின் சட்ட கட்டமைப்பை மிகவும் பொருத்தமானதாகவும், பச்சாதாபமாகவும் மாற்றியமைக்கிறது என்று கூறினார்.