5000 லட்சம் கோடியில் ஒரு சிறு பகுதிதான் பொன்முடியிடம் சிக்கியது!
Jul 26, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5000 லட்சம் கோடியில் ஒரு சிறு பகுதிதான் பொன்முடியிடம் சிக்கியது!

- பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன்!

Web Desk by Web Desk
Dec 22, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எப்படி குறைத்து மதிப்பிட்டாலும் பொன்முடியின் குடும்பத்தினர் 50000 கோடி அளவுக்கு ஊழல் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பார்கள் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

வங்கியின் கணக்குப்படி ஒரு 500 கோடி ரூபாய் கணக்குப்படி கஜானாவில் இருக்கவேண்டும் ஆனால் இல்லை! யார் இதை திருடியது என தெரியவில்லை! எப்படி திருடப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவில்லை! வங்கியின் அதிகாரி ஒருவர் திடீர் கோடீஸ்வரராக மாறுகிறார்! வெளிநாடுகளில் கூட சொத்து சேர்க்கிறார்! எனவே அவர்மீது விசாரணை அமைப்புகளுக்கு சந்தேகம் எழுகிறது! அவர்தான் திருடியிருப்பார் என முடிவு செய்து அந்த முடிவின் அடிப்படையில் ஆதாரங்களை தேடினார்கள்! எப்படி திருடினார் என கண்டுபிடித்து விட்டார்கள்! அத்தனை சொத்துக்களையும் அந்த 500 கோடி மூலம் சம்பாதித்ததையும் வட்டியும் தொகையுமாக பறிமுதல் செய்து, அவன் குடும்பத்தையே ஜெயிலில் அடைத்தார்கள்! இதை செய்து முடிக்க 50 ஆண்டுகள் ஆனது!

தமிழகத்தில் ஏறத்தாள 1500 ஆயிரம் கோடி பணத்தை கடந்த 55 ஆண்டுகளாக தவணை முறையில் காணவில்லை! திருட்டு போயிருக்கிறது! புலனாய்வு அமைப்புகள் ஆராய்ந்து பார்த்ததில் திட்டங்களுக்கு என கஜானாவிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் அந்த தொகை திட்டங்களுக்கு போகவில்லை!

கஜானாவில் இருந்து மட்டுமல்லாமல் மக்களிடமிருந்தும் லஞ்சமாக பெருந்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது! கனிமவள கொள்ளை மூலமும் திருடப்பட்டுள்ளது! கஜானாவில் இருந்து திட்டம் என சொல்லி எடுத்தது, லஞ்சமாக மக்களிடமும் அதிகாரிகளிடமும் இருந்து வாங்கியது, கனிமவள கொள்ளையில் திருடியது என மொத்தமாக சேர்த்தால் தொகை 5000 லட்சம் கோடியை தாண்டும்! இத்தனை தொகையும் கடந்த 55 ஆண்டுகாலமாக கழக ஆட்சியினரால் திருடப்பட்டுள்ளது என்பதுதான் வழக்கு!

வங்கி விவகாரத்தில் ஒரு அதிகாரிதான் திடீர் கோடீஸ்வரனாக மாறினான், அவன் மீது சந்தேகப்பட்டு, அவன்தான் திருடியிருப்பான் என இலக்கு நிர்ணயம் செய்து அவனிடம் விசாரனை செய்து அவனையும் அவன் குடும்பத்தையும் ஜெயிலில் அடைத்து விட்டனர்! ஆனால் இங்கே ஒருவர் மட்டும் திடீர் பணக்காரன் ஆகவில்லை! இங்கே ஆயிரக்கணக்கானவர்கள் சந்தேகத்திற்குரிய திடீர் பணக்காரர்களாக காட்சியளிக்கிறார்கள்! எம்.எல்.எ, எம்.பி. மந்திரி மாவட்ட செயலாளர்கள், வட்டச்செயலாலர்கள், அந்த கட்சி, இந்த கட்சி, கட்டப்பஞ்சாயத்து, குட்டப்பஞ்சாயத்து என பட்டியல் நீழுகிறது!

ஒரு பெரிய திமிங்கலத்தின் வால்மட்டும் இப்போது கையில் கிடைத்திருக்கிறது! அந்த திமிங்கலத்தின் பெயர் பொன்முடி! இந்துமதத்தை அழிப்பதற்காக திகவில் சேருவதற்காக மாசிலாமணி என பெர்றோர் வைத்த பெயரை பொன்முடி என மாற்றி, ”நான் ஹிந்து அல்ல!” ”நான் ஹிந்துவுக்கு எதிரி!” ”நான் ஹிந்துமதத்தை அழிக்க புறப்பட்டவன்” என திராவிடக்கழக மேடைகளில் முழங்கிய அதே வேளையில் அரசு கல்லூரியின் ஆசிரியராக பணியாற்றி அரசு சம்பளம் வாங்கியவர் இவர்!

அரசு வேலையில் இருப்பவர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது சட்டமாக இருந்தாலும் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இவரது கூட்டாளி கட்சிகளாக இருந்ததால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் இவரின் காலை தொட்டு வணங்கினர்!

தேடப்படும் 5000 லட்சம் கோடியின் ஒரு பங்கு இவரிடம் இருப்பது தெரிய வந்தாலும் வாலை மட்டும்தான் பிடிக்க முடிந்திருக்கிறது! எஞ்சிய பகுதிகளை கைப்பற்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை முயன்றுவருகிறது! மாநில லஞ்சஒழிப்புத்துறையின் இன்னொரு வழக்குக்கூட இவர்மீது நிலுவையில் உள்ளது!

குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்கில் திமுகவின் மூத்த அமைச்சர், திராவிட கொள்கையின் போர்வாள், கருணாநிதி தயாளுஅம்மாளின் குடும்ப உறவாக விளங்கிய பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் கணவன் மனைவிக்கு தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது!

பொதுமக்கள் சொத்தை சுரண்டியதற்காகத்தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது! ஆனாலும் பொதுமக்களுக்கு இந்த தீர்ப்பில் திருப்தி இல்லை!

வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டி அபராதம் விதிக்கும் நீதிமன்றம், ஏன் ரூபாய் ஒரு கோடி மட்டும் அபராதம் விதித்துள்ளது? என மக்கள் கேட்கிறார்கள்! செய்த குற்றத்திற்கு அபராதம்தான் ஒருகோடி (தலா 50 லட்சம் ) என்றால், அந்த ஊழல் சொத்தை அரசு பறிமுதல் செய்ய வேண்டுமே! அது செய்யப்படுமா? என்பது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது!

எப்படி குறைத்து மதிப்பிட்டாலும் பொன்முடியின் குடும்பத்தினர் 50000 கோடி அளவுக்கு ஊழல் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பார்கள்! கெட்ட கேட்டுக்கு இவரின் ஒரு மகனை எம்.பி யாகவும் தேர்ந்தெடுத்துள்ளனர் மக்கள்!  பொன்முடி அவர்களுக்கும் அவரின் மனைவிக்கும் வழங்கப்பட்டிருக்கும் தண்டனை போதுமானதல்ல, அவரின் குடும்பம் சேர்த்து வைத்திருக்கும் ஊழல் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை!

டி.ஆர்.பாலு, துரைமுருகன், எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், உதயநிதி, ஸ்டாலின் என பட்டியல் நீழும் என மக்கள் காத்துக்கிடக்கிறார்கள்! புலனாய்வு அமைப்புகளும் தமிழகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறையும் நீதிமன்றங்களும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சற்று அதிக வேகம் காட்ட வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக உள்ளது!

அதே வேளையில் திமுகவினர் “ இவன் (பொன்முடி) விவரம் தெரியாமல் தனது பெயரிலும் தன் மகன் பெயரிலும் கொள்ளையடித்ததை பதிவு செய்துவிட்டான், பினாமிகள் பெயரில் பதிவு செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! பினாமி பெயரில் சொத்துக்களை வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக இருக்கும் நமக்கும் அல்லவா இப்போது கெட்ட பெயராகி விட்டது “ என்று பேசிக்கொள்கிறார்கள்! பினாமி சொத்துக்களையும் பிடுங்கவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் வேண்டுகோளாகும்! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpkumari krishnan article
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் இயல்பு நிலைக்குத் திரும்பிய இரயில் சேவை!

Next Post

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் : பட்டம் வென்ற தமிழக வீரர்!

Related News

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies