இந்தியாவில் மேலும் 640 பேருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கேரளாவில் மட்டும் 265 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 28 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 70 ஆயிரத்து 887 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 220 கோடியே 67 இலட்சம் டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.