திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல் மட்டுமே என மத்திய அமைச்சர் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் இலட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இளைஞர் விவகாரம், தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், வணக்கம் என்று தமிழில் சொல்லி பேச்சை தொடங்கினார்.
வேறுபட்ட மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா உதவும். இதில், 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். 1.4 பில்லியன் இந்தியர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 30 லட்சம் பேர் MY BHARATH ஆன்லைன் போர்டலில் இணைந்து உள்ளனர். ஒரு கோடி பேரை சேர்ப்பது தான் இலக்கு.
2014 -ல் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தான் இருந்தன. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. 2014 -ல் 362 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. தற்போது 700 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ மீட்டர் இருந்த நெடுஞ்சாலை தற்போது 2 லட்சத்திற்கு மேல் உள்ளது. 45 கோடி வங்கி கணக்குகள் தற்போது உள்ளன. நாடு அனைத்து துறைகளிலும் மேம்பட்டு செயல்படுகிறது. இளைஞர்களாக உள்ள நீங்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும்.
2014 இல் 500 க்கும் குறைந்த start up தான் இருந்தன. இப்போது மூன்றாவது பெரிய start up நாடாக உள்ளது.பொருளாதாரத்தில் வேகமாக வளருகிறது இந்திய நாடு.
ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் இலவச தானியங்கள் கிடைக்கின்றன. 42% டிஜிட்டல் பேமெண்ட்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன.
பொருளாதார உள்கட்டமைப்பு மட்டுமின்றி சமூக உள்கட்டமைப்பிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்த இரண்டையும் ஒருசேர முன்னேற்றுவதன் மூலமாகவே உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும் என்பது பிரதமரின் நம்பிக்கை.
மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சத்தை எட்டியுள்ளது.
2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார் என்றார்.
பின்னர், மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, முதல்முறையாக ஆசிய மற்றும் பாரா ஆசிய போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வென்று உள்ளது. இந்த முறை கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தமிழ்நாடு நடைபெற உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாடியது சிறந்த அனுபவமாக இருந்தது, விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவை எப்படி மக்கள் இயக்கமாக மாற்றி 2047 இல் இந்தியா வளர்ந்த நாடாக மாற்றுவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 2 கோடி பயனாளிகள் தங்கள் அனுபவம் குறித்து பகிர்ந்து உள்ளனர். 15 கோடி மக்களுக்கு மேல் இந்த யாத்ரா மூலம் பயனடைவார்கள் என்றவர்.
நாடாளுமன்றத்தில் புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவத்தில், பொய்யான கதைகளை பரப்புவதில் தான் முழு கவனத்துடன் உள்ளனர். பாராளுமன்ற நிகழ்வில் எதிர்கட்சி எம்பிக்கள் நடந்து கொண்டது அசிங்கமாக உள்ளது, வீடியோக்கள் எடுத்து ஒளிபரப்பினர். மிமிக்கிரி செய்தது எல்லாம் முதல் முறையல்ல, ராகுல் காந்தி இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.
மல்யுத்த வீராங்கனை சாக்க்ஷி மாலிக் விவகாரத்தை பொறுத்தவரை, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, முடிவுகளை நீதிமன்றம் தான் எடுக்கும், யாரும் தலையிட முடியாது, அந்த அகாடெமிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்றார்.
பின்னர் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியவர், தமிழகத்தில், மீண்டும் ஒரு திமுக அமைச்சர் ஊழல் வழக்கில் கைதாகி உள்ளார். திமுகவின் முதன்மையான நோக்கம் ஊழல். சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். இந்தியாவை வடக்கு தெற்கு பிரிக்க முயல்கிறார்கள். வஞ்சகத்தை விளைவிக்கிறார்கள் இது நாட்டுக்கு நல்லதல்ல என்றார்.