மகரிஷி மேஹி ஆசிரமத்திற்குச் சென்றபோது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பாதுகாப்பு குறைப்பாடு ஏற்பட்டது.
பீகாரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பிரபல பல்கலைக்கழகத்தில் பன்மொழி இலக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் டாக்டர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிலையில் இன்று குப்பாகாட்டில் உள்ள மகரிஷி மேஹி ஆசிரமத்திற்குச் சென்றபோது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு பாதுகாப்பு குறைப்பாடு ஏற்பட்டது.
பாகல்பூரில் உள்ள கோவில் பூசாரி முன்னா பாபா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் புத்தகத்தை கொடுத்து, அவரது பாதங்களை தொட முயன்றார்.
முன்னா பாபாவின் வித்தியாசமான கண்ணாடி மற்றும் தொப்பியைக் கவனித்த பாதுகாப்புப் பணியாளர்கள், உடனடியாக சந்தேகமடைந்து, அவரை தடுத்து நிறுத்தி, அப்புறப்படித்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் பாதுகாப்புப் பணியாளர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்திற்கான பாதுகாப்பு குறித்த விவாதத்தை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.