கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை திரும்பப்பெறும் முதலமைச்சர் சித்தராமையாவின் முடிவு மதச்சார்பற்ற தன்மை குறித்து கவலையை ஏற்படுத்துவதாக கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கவலை தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் உள்ள ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் பெறுவதாக கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையாவின் அறிவிப்புக்கு பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் மத உடையை அனுமதிப்பதன் மூலம், சித்தராமையா அரசு, இளம் மனங்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதை ஊக்குவித்து, கற்றல் சூழலுக்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிளவுபடுத்தும் நடைமுறைகளை விட, கல்விக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் மத நடைமுறைகளின் தாக்கம் இல்லாமல் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தும் சூழலை வளர்ப்பது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.