தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் போது, ஒரு கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டதில் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தச் சாதனையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அரசு திட்டங்களின் நன்மைகளை தகுதியான அனைத்து குடிமக்களுக்கும் கொண்டு செல்வதே இந்த யாத்திரையின் நோக்கம் என்று கூறினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
बहुत ही उत्साहित करने वाली जानकारी! विकसित भारत संकल्प यात्रा का उद्देश्य भी तो यही है कि देशभर के मेरे सभी गरीब भाई-बहनों तक हमारी योजनाओं का लाभ पहुंचे। https://t.co/lGD6GT6wSy
— Narendra Modi (@narendramodi) December 23, 2023
“மிகவும் பரபரப்பான தகவல்! வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் நோக்கம் என்னவென்றால், எங்கள் திட்டங்களின் நன்மைகள் நாடு முழுவதும் உள்ள எனது ஏழை சகோதர சகோதரிகள் அனைவரையும் சென்றடைவதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.