இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
காசாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் விவாதித்து வருகின்றன. ஆனால் வீட்டோ அதிகாரத்தின் மூலம் அதனை ரத்து செய்த அமெரிக்கா போா் நிறுத்தத்தை வலியுறுத்தக்கூடாது என்று கூறி வருகிறது. இதனிடையே காசாவில் தரைவழித்தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.அமைப்பின் பல ஊழியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், உலக வரலாற்றில், அதிக ஐ.நா ஊழியர்களின் உயிரிழந்ததை யாரும் இதுவரை பார்த்ததில்லை என்று குடெரெஸ் கூறினார். காசாவில் உள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக தங்கள் உயிரை தியாகம் செய்த ஐ.நா. பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குடெரெஸ் தெரிவித்தார்.