உலகின் மிக அழகான விமான நிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு சிறந்த பரிசு கிடைத்திருப்பதற்கு, பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.
யுனெஸ்கோவின் பிரிக்ஸ் வெர்சாய்ஸ் நிறுவனம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை உலகின் மிக அழகான விமான நிலைய முனையங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது ஒரு பாராட்டுக்குரிய சாதனை! பெங்களூரு மக்களுக்கு வாழ்த்துகள். கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2, துடிப்பான நகரமான பெங்களூருக்கான நுழைவாயில் மட்டுமல்ல, கட்டிடக்கலை திறமையின் வெளிப்பாடாகவும் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் கலை அழகுடன் இணைப்பதில் நாட்டின் வளர்ந்து வரும் திறமையை இந்த சாதனை பிரதிபலிக்கிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின், இரண்டாவது முனையத்தை, கடந்தாண்டு நவம்பர் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.