தொடர் விடுமுறை காரணமாக பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
முருகனின் மூன்றாம் படை வீடான அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதேபோல் திருவிழா மற்றும் விஷேச நாட்களில் விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரள்வது வழக்கம். அந்தவகையில் சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் என தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதனால் பழனி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ரோப்கார், மின்இழுவை நிலையம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு செல்கின்றனர்.