முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டிருந்த ஐஐடி பேராசிரியர் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற ஐஐடி கான்பூர் வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, அந்த கல்லூரியில் பணியாற்றிய சமீர் காண்டேகர் என்ற பேராசிரியர் மாணவர்கள்மத்தியில் உரையாற்றி கொண்டிருந்தார்.
மாணவர்களே, உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று அவர் பேச்சை நிறைவு செய்ய முயன்றார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பேராசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது மகன் பிரவாக் கன்டேகர், கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்து வருகிறார். அவர் வந்த பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.