புருண்டி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய கொடூரத் தாக்குதலில், 12 குழந்தைகள், 2 கர்ப்பிணி பெண்கள் உட்பட 20 உயிரிழந்தனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் புருண்டி நாடு அமைந்துள்ள. இந்நாட்டில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வப்போது அரசுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், அப்பாவி பொதுமக்களை பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல், புருண்டி நாட்டிற்கு அருகே உள்ள காங்கோ நாட்டிலும் பல கிளர்ச்சி குழுக்கள் உள்ளன. குறிப்பாக, காங்கோவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரெட்-தபரா கிளர்ச்சிக்குழு புருண்டி நாட்டிற்குள் அவ்வப்போது புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், புருண்டி நாட்டின் லேக் தங்ஹங்கியா நகரில் உள்ள வுகிசோவில் கடந்த வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஒன்பது வீடுகளைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், 12 குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரத் தாக்குதலுக்கு ரெட்-தபரா கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது.