இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 230-யை கடந்துள்ளது. ஓடிடி, இணையதளம், நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான படங்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு துறை என்றால் அது சினிமா என்றே சொல்லலாம். பல காலமாக பல விஷயங்கள் மாறினாலும் என்றும் மாறாமல் இருப்பது சினிமா.
வாரம் முழுக்க உழைப்பவர்கள் பொழுது போக்கு சினிமா. பரீட்சை முடிந்தவுடன் பள்ளியில் பயிலும் பசங்க பறந்து செல்லும் இடம் சினிமா. மனிதனின் வாழ்வியலை எடுத்துக் காட்டியதும் சினிமா. பல மக்களின் கனவு சினிமா. பலரின் காதலும் சினிமா. இப்படி சினிமா என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் தனி உணர்ச்சி இருக்கும்.
இப்படி அனைவர்க்கும் பிடித்த சினிமாவை காண்பதற்கான ஒரு இடம் தான் தியேட்டர். இன்றைய டிஜிட்டல் உலகில் படம் பார்க்க நிறைய வசதிகள் இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் பார்க்க ஏங்கும் ஒரு கூட்டமே உள்ளது.
இப்படிப் பட்ட சினிமா இந்த வருடம் அதாவது 2023 ஆம் ஆண்டு ஒரு சாதனையைப் படைத்துள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 92 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஒரே வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் வெளியான ஆண்டாக இந்த 2023ம் ஆண்டு உள்ளது.
கடந்த வாரம் வரை தியேட்டர்களில் வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை 230-யை கடந்துள்ளது. ஓடிடி, இணையதளம், நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான படங்களின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளன.
இந்த 2023ம் ஆண்டின் மாதத்தின் கடைசி வெளியீட்டு நாளான டிசம்பர் 29ம் தேதி சுமார் 11 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் படங்களையும் சேர்த்தால் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 240-யையும், ஓடிடி படங்களையும் சேர்த்தால் இந்த ஆண்டில் வெளிவந்த மொத்த படங்களின் எண்ணிக்கை 250-யையும் தாண்டும்.
தமிழ் திரையுலகம் 92 வருடங்களில் இந்த ஆண்டு இந்த சாதனையைப் படைத்தது சினிமாவிற்கு வரவேண்டும் என்ற கனவில் இருக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.