பாக்சிங் டே கிரிக்கெட் என்றால் என்ன ? இதை கண்டுபிடித்தது யார் ? எப்போது தொடங்கியது என்று பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.
அதே நேரத்தில், ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கும் போட்டி ’பாக்சிங் டே டெஸ்ட் போட்டி’ என்று அழைக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் அதிக நபர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஒன்று. இந்தப் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே ஒருவருக்கொருவர் அன்பை பரிசுகள் மூலம் பரிமாறி கொள்வார்கள்.
அதற்கேற்ப இங்கிலாந்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறிய பெட்டிகள் (பாக்ஸ்) வைக்கப்படுவது வழக்கம். அதில் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு சிலர் பரிசை கொடுப்பார்கள்.
இந்த பாக்ஸை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி திறந்து பரிசை எடுத்து தருவார்கள். அந்த பாக்ஸை திறக்கும் நாளன்று தொடங்கும் விளையாட்டு போட்டிகள் பாக்சிங் டே விளையாட்டு போட்டிகள் என்று அழைக்கப்படும்.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன் உள்நாட்டு கிரிக்கெட்டில் இது தொடங்கியது, ஆண்டு 1892 கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டி நடைபெற்றது.
1968-ம் ஆண்டு முதல் முறையாக பாக்சிங் டே அன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதற்குப் பிறகு, 1980 முதல், ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 முதல் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை நடத்துகிறது.
அதன்படி நாளை இந்தியா – தென் ஆப்பிரிக்கா ; ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பாக்சிங் டே கிரிக்கெட் நடைபெறவுள்ளது.