2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் நேரத்தில், ராஜஸ்தான் அரசை மக்கள் நிராகரிக்கப் போகிறார்கள் என்று கூறியதாகவும், அது நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் உத்தரவாதத்தை நம்பி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலிலும் இதே நிலை தொடரும் என்றும், பிரதமர் மோடி பிரதமராக வருவார் என்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.