துவாரகாவில் கோலாகல "மஹா ராஸ்": 37,000 பெண்கள் பங்கேற்பு!
Aug 8, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துவாரகாவில் கோலாகல “மஹா ராஸ்”: 37,000 பெண்கள் பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 12:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குஜராத் மாநிலம் துவாரகாவில் 37,000 பெண்கள் பங்கேற்ற “மஹா ராஸ்” கோலாகலமாக நடைபெற்றது. ஏ.சி.சி. சிமென்ட் நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பெண்கள் உண்ணாவிரதம் மற்றும் மௌன விரதம் இருந்து பங்கேற்றனர்.

குஜராத் மாநிலம் துவாரகா நகரில், இந்துக்களின் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மருமகளின் நினைவாக “மஹா ராஸ்” திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு மஹா ராஸ் திருவிழா துவாரகாவில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை பாரதிய அஹிரானி மஹாராஸ் சங்கதன், அகில் பாரதிய யாதவ் சமாஜ் மற்றும் அஹிரானி மஹிலா மண்டல் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.

நந்த் தாம் எனும் இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமான ஏ.சி.சி. சிமென்ட் நிறுவன வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்திருவிழாவில், ஆஹிர் இனத்தைச் சேர்ந்த 37,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து பங்கேற்றனர்.

இப்பெண்களில் பெரும்பாலோனோர் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இத்திருவிழாவைக் காண சுமார் 1.5 லட்சம் அஹிர் யாதவ் இன மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

இந்த “மஹா ராஸ்” நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பக்தியுடன் உண்ணாவிரதமும், மௌன விரதமும் இருந்து கலந்து கொண்டனர். மஹா ராஸ் விழாவில் பங்கேற்ற அனைத்து பெண்களுக்கும் இந்துக்களின் புனித நூலான “ஸ்ரீ பகவத் கீதை” பரிசளிக்கப்பட்டது. விழாவில் குஜராத் மாநிலம் ஜம்நகர் சட்டப்பேரவை உறுப்பினர் பூனம்பென் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags: festivalDwarakaMaharas
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்டாலின் சொன்ன கிருஷ்துமஸ் பொய்!

Next Post

நாடாளுமன்றத் தேர்தல் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும்!

Related News

ரஷ்யா மீதான புதிய பொருளாதாரத் தடை மசோதா – அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்!

அசாமில் கொட்டித்தீர்க்கும் மழை – பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு!

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies