இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 315 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 71 ஆயிரத்து 860 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது, உலக நாடுகள் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வந்த நிலையிலும், பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தியது. தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 79 ஆயிரத்து 81 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளைப் போடப்பட்டுள்ளது.