கிறிஸ்துமஸ் தினத்ததை முன்னிட்டு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின வாழ்த்து செய்தியில்,
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
இந்த மகிழ்ச்சித் திருவிழா நல்லிணக்கம், அன்பு மற்றும் இரக்கத்தின் செய்தியைப் பரப்புகிறது.
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைவு கூர்வோம், அனைவரின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட தீர்மானிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
Merry Christmas to all!
This festival of joy spreads the message of harmony, love and compassion. Let us recall the teachings of Jesus Christ and resolve to work together for well-being and prosperity of one and all.— President of India (@rashtrapatibhvn) December 25, 2023
குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் தின வாழ்த்து செய்தியில்,
“இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் திருநாளில் இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை இரக்கம், மன்னிப்பு, அன்பு மற்றும் கருணை ஆகியவற்றின் நித்திய மதிப்புகளை உள்ளடக்கியது. நமது வாழ்க்கையை வளமாக்கும், நமது பிணைப்பை வலுப்படுத்தும் இந்தக் காலத்தால் அழியாத நற்பண்புகளை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.
இந்த நாளின் மகிழ்ச்சி நமக்குள் எதிரொலித்து, அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை வளர்க்கட்டும். அனைவருக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியும் நல்லெண்ணமும் நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.