ஜம்மு காஷ்மீர் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
Mar 15, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 25, 2023, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் ஜம்மு காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 250 மாணவர்கள் பங்கேற்றனர்.

“ஒரே இந்தியா உன்னதமான இந்தியா” என்ற உணர்வில், நாட்டின் கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு காண்பிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, மத்திய அரசின் ‘நாட்டை அறிந்து கொள்ளுங்கள்: இளைஞர் பரிமாற்றத் திட்டம் 2023’-ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் 250 பேர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் புதுடெல்லிக்கு மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்த வகையில், புதுடெல்லிக்கு வந்த மாணவர்களை பாரதப் பிரதமர் மோடி, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் பயண அனுபவம் மற்றும் பார்வையிட்ட புகழ்பெற்ற இடங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

மேலும், ஜம்மு காஷ்மீரின் வளமான விளையாட்டு கலாச்சாரம் குறித்து பிரதமர் விவாதித்தார். தவிர, கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்பது குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது, ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவியை பிரதமர் உதாரணம் காட்டினார். அதோடு, ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களின் திறமையைப் பாராட்டிய பிரதமர், அவர்கள் எந்தத் துறையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

அதேபோல, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 கனவை நனவாக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் மாணவர்கள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். இது தவிர, சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 திட்டத்தின் வெற்றி  குறித்து மாணவர்களுடன் விவாதித்த பிரதமர் மோடி, மேற்கண்ட அறிவியல் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளன என்றார்.

மேலும், இந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது குறித்து பேசிய பிரதமர், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத் துறையில்  ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றார். குறிப்பாக, யோகாவின் நன்மைகள் குறித்து பேசிய பிரதமர், மாணவர்கள் தினமும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காஷ்மீரில் ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், நாட்டை தூய்மையாக மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான இரயில்வே பாலம் கட்டப்படுவது குறித்து பேசிய பிரதமர், இது பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் என்றார்.

Tags: PM Modijammu kashmirstudentsInteracts
ShareTweetSendShare
Previous Post

வாஜ்பாயின் மகத்தான பங்களிப்பை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்! – அமித்ஷா

Next Post

4 மாவட்டங்களில் இடி மின்னடலுடன் மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies