பிரதமர் மோடி தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்பை, உலகெங்கும் உள்ள அனைவருமே அறிந்திருப்பது சிறப்பு எனப் பாஜக மாநிலத்தலைவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பாதிரியார்கள் உள்ளிட்ட கிறிஸ்தவ மத முக்கிய பிரமுகர்கள், பள்ளிக் குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த முக்கியமான பெருமக்கள் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த முக்கியமான பெருமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் திரு ஜான்… pic.twitter.com/AJo9YjUMlk
— K.Annamalai (@annamalai_k) December 25, 2023
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் ஜான் வர்கீஸ் அவர்கள் பேசும்போது, நமது பிரதமருக்கு விருப்பமான மொழியில் பேசி, தனது உரையை முடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டு, நம் தமிழ் மொழியில் சில வரிகள் பேசினார்.
நமது பிரதமர் மோடி அவர்கள், தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள அன்பை, உலகெங்கும் உள்ள அனைவருமே அறிந்திருப்பது சிறப்பு எனத் தெரிவித்துள்ளார்.