ஜே.என்.1 கொரோனா – தமிழ்நாட்டில் 4 பேருக்கு தொற்று உறுதி!
Aug 12, 2026, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜே.என்.1 கொரோனா – தமிழ்நாட்டில் 4 பேருக்கு தொற்று உறுதி!

Murugesan M by Murugesan M
Dec 25, 2023, 05:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு, பின் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து டெல்டா, பின்னர், ஒமிக்ரான் என கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சுறுத்தி வந்தது. தற்போது, ஒமிக்ரான் பிஏ.2.86 வைரஸிலிருந்து திரிபு ஏற்பட்டு, ஜே.என். 1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது.

உலகின் பல நாடுகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு ஜே.என்.1 என்ற உருமாறிய புதியவகை கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தவும், முகக்கவசம் அணியவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கோவாவில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மகாராஷ்டிராவில் 9 பேருக்கும், கர்நாடகாவில் 8 பேருக்கும், கேரளாவில் 6 பேருக்கும், தமிழகத்தில் 4 பேருக்கும், தெலுங்கானாவில் 2 பேருக்கும் ஜே.என்.1 வகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags: corona viruscorona jn1
Share
Tweet
SendShare
Previous Post

ஹர்திக் பாண்டியாவிற்காக ரூ.100 கோடி கொடுத்த மும்பை நிர்வாகம்!

Next Post

பிரதமர் மோடிக்கு விருப்பமான மொழி தமிழ் மொழி! – அண்ணாமலை

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies