மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் மாதகல்பா பகுதி வழியாக சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 19 பேர் உயிரிழந்தனர்.
நிகரகுவா நாட்டின் மாதகல்பா வழியாக, குழந்தைகள், பெண்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, ராஞ்சோ கிரான்டேவில் உள்ள மன்செரா ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தின் மீது பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புச்சுவர் மீது வேகமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.