இந்த ஆண்டுக்கான வாஜ்பாய் விருது, பெருமைக்குரிய ஆறு பேருக்கு வழங்கப்படுகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
முன்னாள் பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்த தினமான இன்று, தேசிய நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, வெளியுறவுத் துறை என அனைத்துத் துறைகளிலும் தேச நலன் ஒன்றையே முன்னிறுத்தி, ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்கிய அமரர் வாஜ்பாய், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சிக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது.
மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர், பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிறந்த தினமான இன்று, தேசிய நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, வெளியுறவுத் துறை என அனைத்துத் துறைகளிலும் தேச நலன் ஒன்றையே முன்னிறுத்தி, ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்கிய… pic.twitter.com/6QexpepvCL
— K.Annamalai (@annamalai_k) December 25, 2023
பாஜகவின் நிறுவனர்களில் ஒருவரான அமரர் வாஜ்பாய் அவர்களின் புகழைப் போற்றும் வகையில், தமிழக பாஜக
சார்பாக, சமூகத்தில் சிறந்து விளங்கும் அற்புதமான மனிதர்களுக்கு, ‘பாரத ரத்னா வாஜ்பாய் விருது’ வழங்கி பெருமைப்படுத்தி வருகிறோம்.
இந்த ஆண்டுக்கான வாஜ்பாய் விருது, பெருமைக்குரிய ஆறு பேருக்கு வழங்கப்படுகிறது.
சுப. நாகராஜன் அவர்கள்: தென்மாவட்டங்களில் நடைபெற்று வந்த ஜாதி மோதல்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு, இணக்கமான சூழல் ஏற்பட உழைத்தவர்.
கட்சி வளர்ச்சிக்காக தொடக்க காலத்தில் இருந்தே பாடுபட்டு வருபவர். அமரர் வாஜ்பாய் அவர்களை தனது இல்லத்தில் உபசரித்த பெருமைக்குரியவர்.
டாக்டர் பாலகுருசாமி அவர்கள்: மிகச் சிறந்த கல்வியாளர், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர். தலைசிறந்த தேசியவாதி. பொறியியல் கல்வி தொடர்பான எண்ணற்ற புத்தங்களை எழுதியுள்ளவர்.
அருட்செல்வப் பேரரசன் அவர்கள்: மகாபாரதத்தை தொடர்ந்து ஏழு ஆண்டுகளில் 13,000 பக்கங்களிலும், மகாபாரதத்தின் தொடர்ச்சியான ஹரிவம்சத்தை, மூன்றாண்டுகளில் 2,000 பக்கங்களிலும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர். தற்போது, ராமாயணத்தின் ஏழு காண்டங்களையும் மறு ஆக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருநங்கை செல்வி ரேகா அவர்கள்: 18 ஆண்டுகளாக, மனிதவளத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி, திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தரும் வகையில் தன்னம்பிக்கையோடு செயலாற்றி வருபவர். திரு. V.V. சுந்தரம் அவர்கள்: கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், தமிழிசை உள்ளிட்ட இந்தியப் பாரம்பரியக் கலைகளின் வளர்ச்சிக்காக, கடந்த 50 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருபவர். தியாகராஜர் உற்சவத்தை 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கி, இன்று மிகப்பெரும் விழாவாக மாற்றியிருப்பவர்.
திரு. P. ராஜசேகர் அவர்கள்: விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து 2007 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரக் காரணமானவர். தமிழக ஜல்லிக்கட்டுப் பேரவையின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருப்பவர். பாரதப் பிரதமர் மோடி ஆதரவுடன் இயற்றப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்டத்தை தமிழகம் முழுவதும் பெருமையுடன் எடுத்துச் சென்றவர்.
இவர்கள் அனைவருக்கும், ‘பாரத ரத்னா வாஜ்பாய்’ விருது இன்று வழங்கியதில், தமிழக பாஜக பெருமையடைகிறது எனத் தெரிவித்துள்ளார்.