ரஷ்யாவில் அணுசக்தி மூலம் இயக்கப்படும் சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
ரஷ்யா நாட்டின் முர்மான்ஸ்க் பகுதியில் உள்ள துறைமுகத்தில், அணுசக்தி மூலம் இயக்கப்படும் சரக்கு கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலின் கேபின் பகுதியில் பற்றிய தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவ ஆரம்பித்தது.
இதனால் அச்சமடைந்த ஊழியர்கள், தங்களுடைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இதனால், அப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தினால் கப்பலின் அணு உலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், கப்பலில் இருந்த ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அணுசக்தி மூலம் இயக்கப்படும் சரக்கு கப்பலில், திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கப்பல், ரஷ்யாவில் பயன்பாட்டில் இருக்கும் ஒரே அணுசக்தி மூலம் இயங்கும் சரக்கு கப்பல் ஆகும்.