விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நவம்பர் 15 அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து பிரதமர் தொடங்கி வைத்தார். விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் கீழ் ஆன்-ஸ்பாட் சேவைகளின் ஒரு பகுதியாக, கிராம பஞ்சாயத்துகளில் விழிப்புணர்வு வேன் நிறுத்தப்படும் இடங்களில் சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதன் பலன்கள் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகள் பங்கேற்கின்றனர். அதேபோல் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து, பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் தொடர்ந்து உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.