மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே துறை அமைச்சகம், ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
We thank our Hon Railway Minister Thiru @AshwiniVaishnaw avl for considering the request of @BJP4TamilNadu & for approving the extension of Erode-Tirunelveli express till Sengottai.
The people of Sengottai & Tenkasi District will benefit hugely from this decision of our Railway… pic.twitter.com/G9geT7q6kT
— K.Annamalai (@annamalai_k) December 27, 2023
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழக பாஜகவின் கோரிக்கையை ஏற்று ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் நமது ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவால் செங்கோட்டை மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.