ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்’ தொடரில் விளையாடவுள்ள சென்னை அணியின் உரிமையாளராக நடிகர் சூர்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியின் அடுத்த கட்டமாக ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக்’ தொடங்கியுள்ளது. ‘ஸ்ட்ரீட் பிரிமியர் லீக் என்பது இந்தியாவின் முதல் டென்னிஸ் பந்து டி10 கிரிக்கெட் போட்டியாகும்.
ஐபிஎல் கிரிக்கெட் போன்றே இதற்கும் தனித்தனி அணிகள் உண்டு. தனித்தனி உரிமையாளர்கள் உண்டு. அதில் ஐதராபாத் அணியைத் தெலுங்கு நடிகர் ராம் சரண் வாங்கி உள்ளார். அக்ஷய் குமார் ஸ்ரீநகர்(காஷ்மீர்) அணியையும், ரித்திக் ரோஷன் பெங்களூரு அணியையும், அமிதாப்பச்சன் மும்பை அணியையும் வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் தற்போது சென்னை அணியின் உரிமையாளராக நடிகரான சூர்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, ” ஐஎஸ்பிஎல் டி-10 தொடரில் எங்களது சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் பாரம்பரியத்தை உருவாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.