நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் பாரதப் பிரதமர் மோடியின் செல்ஃபி பாய்ண்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், GFX இரயில் நிலையங்களில் பிரதமர் மோடி படத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அயோத்தி, அம்பாலா, அமிர்தசரஸ், டேராடூன், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட இரயில் நிலையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்ஃபி பாய்ண்டுகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், வேலூர் உள்ளிட்ட 11 இரயில் நிலையங்களில் பிரதமரின் 3 -டி செல்ஃபி புகைப்படக் கூடங்கள் அமைக்கப்பட உள்ளது.
மத்திய இரயில்வே மண்டலத்தில் மட்டும் 30 தற்காலிக செல்ஃபி பாய்ண்ட்களும் , 20 நிரந்தர செல்ஃபி பாய்ண்ட்களும் நிறுவப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 18 இரயில்வே மண்டலங்களிலும் செல்ஃபி பாய்ண்ட் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதனால், மோடியின் செல்ஃபி பாயிண்ட் குறித்த எதிர்பார்ப்பு பொது மக்களிடையே அதிகரித்துள்ளது.