நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆக்லாந்தில் இந்திய துணைத் தூதரகம் திறப்பது இந்தியாவின் ராஜீய தடத்தை அதிகரிக்கவும், இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் தூதரக உறவு பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தவும் உதவும்.
இந்த நடவடிக்கை இந்தியாவின் உத்திசார் பாதுகாப்பு மற்றும் வணிக நலன்களை மேம்படுத்தவும் ஆக்லாந்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்கு சிறப்பாக சேவை செய்யவும் உதவும்.
12 மாத காலத்திற்குள் தூதரகம் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.