கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்!
Sep 4, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைத்துறையிலும், அரசியலிலும் கேப்டன் விஜயகாந்த் பெரும் சகாப்தம் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. மகளிர் அணியின் தேசியத் தலைவரும், தேசிய தேர்தல் குழு உறுப்பினரும், கோவை தெற்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க. தலைவர் அருமைச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.

நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரது மறைவு தாங்க முடியாத மன வேதனையைத் தருகிறது. தமிழகத்தின் கலாச்சார தலைநகரான மதுரையில் பிறந்து, திரைத்துறையில் போராடி பெரும் சாதனை படைத்தவர். திரைத்துறையில் அவர் பிடித்த இடம் என்பது யாராலும் நிரப்ப முடியாதது.

தே.மு.தி.க. என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி 2006-ல் தான் போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 8 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2006 உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. 10 சதவீத வாக்குகளைத் தாண்டியது.

இதன் பிறகு, 2016 சட்டமன்றத் தேர்தல் வரை தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க பிரதான கட்சிகள் போட்டி போடும் நிலை ஏற்பட்டது. உடல்நலப் பாதிப்பு காரணமாக அரசியலில் அவர் எட்ட வேண்டிய உயரத்தை எட்ட முடியவில்லை. தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டிருந்தாலும் திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் ஒரு பெரும் சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை.

விஜயகாந்த் அவர்களின் மறைவால் வாடும் அவரது மனைவியும், தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான திருமதி பிரேமலதா, மகன்கள், தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: condolencebjp mladeathVanathi Srinivasanactor Vijayakanth
ShareTweetSendShare
Previous Post

பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல் விஜயகாந்த்! – நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

Next Post

விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது! – ஆளுநர் ஆர். என். ரவி

Related News

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீர் திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் : Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

ஜப்பானில் விண்வெளி வீரர் என கூறி மூதாட்டியை ஏமாற்றிய இளைஞர்!

ஜம்மு-காஷ்மீர் : வெள்ள பாதிப்பு குறித்து ட்ரோனில் ஆய்வு செய்த ராணுவம்!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies