தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களின் திடீர் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே, இன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களின் திடீர் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனவே, இன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், விஜயகாந்தை இழந்து வாடும் குடும்பத்தினர், தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.