நடிகர் விஜயகாந்த் எப்போதும் மக்களின் குரலாக இருந்தவர். அவர், மாநில அரசியலில் ஆற்றிய பங்களிப்பும் இதுதான் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருக்கிறார்.
நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், “விஜயகாந்த் தமிழ் சினிமாவில் இருந்த ஒரு சிறந்த நடிகர்.
அவர் தனது பன்முகத்தன்மை மற்றும் சிறப்பான நடிப்பால், ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அழிக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தினார். எப்போதும் மக்களின் குரலாக இருந்தவர். மாநில அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பும் இதுவே.
ஆகவே, மக்கள் மனதில் விஜயகாந்த் என்றென்றும் நிலைத்திருப்பார். இந்த இக்கட்டான நேரத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.