இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்துள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து இன்று முதல் ஒரு நாள் போட்டி தொடங்கியது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதேபோல் இந்திய வீராங்கனை ஜெமிமா 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பூஜா 62 ரன்கள் எடுத்த நிலையில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் 2 விக்கெட்களை வீழ்த்தினர். டார்சி பிரவுன், மேகன் ஷட், அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் அலனா கிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.