இப்போது மாற்று அரசியல் மக்களின் கண்முன்னே இருக்கிறது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
தமிழக பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாரை பொறுத்தமட்டில் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதும் பொன்முடி சிறைக்கு போகப்போவதும் பேரதிர்ச்சியை தந்துள்ளது! கடுமையான வருத்தத்தை தெரிவிக்கும் வகையில்தான் செய்தி ஊடகங்கள் புலம்புகின்றன! பொன்முடியின் கதி என்ன ஆகும்? என்பது பெரிய கவலையாக ஊடகங்களுக்கு உள்ளது!
பொதுவாக எல்லோருமே இந்த நீதிமன்ற நடவடிக்கைகளால் ஊழல்வாதிகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவர்களின் வெற்றி பாதிக்கப்படாது என்கிறார்கள்!
ஊழலுக்கு எதிரான இந்த தீர்ப்பினை ஆதரித்து உண்மையாகவே மகிழ்ச்சியடையும் சில பத்திரிக்கையாளர்களும் கூட, ”மக்கள் ஊழலை கருத்தில் வைத்துதான் வாக்களிப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது! ஊழல் என்பது வேறு வாக்களிப்பது என்பது வேறு”, எனதான் விளக்கம் சொல்கிறார்கள்!
”நீதிமன்றங்களே! நீங்கள் யாரை வேண்டுமானாலும் தண்டியுங்கள், சிறையில் அடையுங்கள், உங்களின் இந்த நடவடிக்கைகள் சமுதாயத்தில் நீங்கள் நினைப்பதுபோல் மாறுதலை ஏற்படுத்தாது! மக்கள் ஊழலை எதிர்க்கவில்லை”- என்பதுதான் பொதுவாக அனைவரின் கருத்தாகவும் உள்ளது!
இந்த கருத்துக்கு எடுத்துக்காட்டாக இவர்களெல்லாம் காட்டும் நிகழ்வு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு! ஜெயலலிதா அவர்கள் நீதிமன்ற தண்டனைக்குப்பிறகும் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சரானார்! இந்த நிகழ்வைத்தான் சுட்டிக்காட்டி ஊழலை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்கிறார்கள்!
இன்னொரு காரணம் கருணாநிதி! கருணாநிதி! மிகப்பெரிய ஊழல்வாதிதான் என்பதை மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள்! ஆனால் அதே வேளையில் கருனாநிதியின் ஊழலை காரணமாக வைத்து மக்கள் கருனாநிதிக்கு வாக்களிக்க மறுப்பதில்லை! ”வாக்களிக்க ஊழல் தடை இல்லை” என்பதுதான் பெரும்பாலான தமிழர்களின் கருத்து என்பதுதான் இப்போது பத்திரிக்கைகளில் எழுதப்பட்டு வருகிறது! டி.வி ஊடகங்கலில் இந்த கருத்து பரப்பப்பட்டு வருகிறது! சுருக்கமாக சொன்னால், ”மக்கள் ஊழலுக்கு உடந்தையானவர்கள்” என இவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்! இந்த குற்றச்சாட்டு சரியா?
இப்போதுகூட இரண்டு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்தாலும், இன்னும் சிலர் சிறைக்கு சென்றாலும், சிறைவாசிகளை அமைச்சர்களாக திமுக அரசு வைத்திருந்தாலும், வரும் 2024 தேர்தலில் திமுகதான் அதிக வாக்குகளை பெற்று அதிக வெற்றிகளை அடையும் என்பதுதான் பொதுவான தமிழக கருத்தாக திகளுகிறது!
இது உண்மையல்ல என்பது எமது கருத்தாகும்! பொரியல் செய்து சாப்பிட ஒரு காய் வாங்கிட குடும்பத்தலைவி கடைக்கு செல்கிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்! அந்த பகுதியில் அந்த ஒரே ஒரு கடைதான் இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள்! அங்குதான் வாங்கியாகவேண்டும்!
வேறு வழியே இல்லை என்னும் நிலையில் அவள் கடையில் என்னென்ன காய்கள் இருக்கிறது என எட்டிப்பார்க்கிறாள்! சொத்தை விழுந்த கத்தரிக்காயும் வாடிப்போன வெண்டைக்காயும்தான் இருக்கிறது! இன்று பொரியலே வேண்டாம் என்று அவள் முடிவு செய்யமுடியாது! எனவே குடும்பத்தலைவி கத்தரிக்காயை வாங்கி சொத்தையை சீவி தள்ளிவிட்டு பொரியல் செய்யலாம், வாடிய வெண்டைக்காயை வாங்கி தன்ணீரில் போட்டு வைத்து கழுவி சீவிப்போட்டு சமையல் செய்யலாம்! இருப்பதில் ஒன்றைதான் அவள் தேர்ந்தெடுக்க முடியும்! இதுதான் இத்தனை நாளும் தமிழக வாக்காளர்களின் நிலைப்பாடு! அதற்காக அவர்கள் ஊழலை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொல்ளவில்லை என்பது பொருளல்ல என்பதுதான் எமது கருத்தாகும்!
இன்னொரு காய் பளபளவென அங்கு இருந்திருந்தால் அவள் அந்த காயை தெரிவு செய்திருப்பாள்! இப்போதுதான் அட்சய பாத்திர பண்டம்போல, சுவைக்கு சுவையாக ஊட்டச்சத்துக்கு ஊட்ட சத்தாக ஒரு காய் கடையில் இருக்கிறதே! அதுதான் மக்கள் தலைவர் அண்ணாமலை! இந்த காய் அட்சய பாத்திரத்தில் கிடைக்கும் அமுதைப்போல எத்தனை முறை சமைத்தாலும் மீண்டும் காயாகவே காட்சியளிக்கும்! உங்களோடு உங்களுக்கு உதவியாக உணவாக மருந்தாக எப்போதும் இருக்கும்! இப்படி ஒரு காய் இருந்துவிட்டால் மக்கள் சொத்தை கத்தரிக்காயையும் வாடிப்போன வெண்டைக்காயையும் வாங்க மாட்டார்கள்!
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டபோதும், கருணாநிதியின் ஊழல்கள் வெளிப்பட்ட கால கட்டத்திலும் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் என்பது வேறு! இப்போதைய அரசியல் சூழல் என்பது வேறு! இப்போது மாற்று அரசியல் மக்களின் கண்முன்னே இருக்கிறது! அன்று இப்படி இல்லை!
ஊடகவியலார்களும், பத்திரிக்கைகளும், பெரும்பாலான சமூக ஆர்வலர்களும் கருதுவதைப்போல, ”மக்கள் ஊழலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் திமுகவுக்குதான் மீண்டும் வாக்களிப்பார்கள்” – என்னும் கருத்து இந்த முறை பொய்த்துவிடும்! காரணம் மக்களுக்கு மாற்று இப்போது கையில் இருக்கிறது! அந்த மக்களின் மாற்றுதான் மக்கள் தலைவர் அன்னாமலை! எனத் தெரிவித்துள்ளார்.