நாடு முழுதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து, உபயோகமற்ற பொருட்கள் அகற்றப்பட்டு விற்கப்பட்டதன் மூலம் 2021 அக்டோபர் முதல் இதுவரை, 1,163 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஸ்கிராப் விற்பனையின் மூலம் ரூ.1,163 கோடி வருவாய் என்பது, பிரதமர் நரேந்திர மோடியின், தூய்மைக்கான அரசாங்கத் திட்டம் எவ்வளவு பெரியது, முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் துறை இந்த இயக்கத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஸ்கிராப் விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த ரூ.556 கோடியில், ரயில்வே அமைச்சகம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.225 கோடி ஈட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் ரூ.168 கோடியும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ரூ.56 கோடியும், நிலக்கரி அமைச்சகம் ரூ.34 கோடியும் வருவாய் ஈட்டிய பிற முக்கிய நிறுவனங்கள்.
இந்த ஆண்டு விடுவிக்கப்பட்ட 164 லட்சம் சதுர அடியில், அதிகபட்சமாக நிலக்கரி அமைச்சகம் 66 லட்சம் சதுர அடியிலும், கனரக தொழில் அமைச்சகம் 21 லட்சம் சதுர அடியிலும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் 19 லட்சம் சதுர அடியிலும் விடுவிக்கப்பட்டுள்ளது.