விஜயகாந்த் உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!
Sep 28, 2026, 09:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்த் உடலுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

மனித நேயம் மிக்க சிறந்த தலைவரை  இழந்து விட்டோம் - நிர்மலா சீதாராமன்

Murugesan M by Murugesan M
Dec 29, 2023, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனக்கு கிடைக்கும் வசதிகள் தன்னுடன் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தவர் விஜயகாந்த் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடலுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச்செயலாருமான பிரேமலதா, அவரின் மகன்கள் உள்ளிட்டோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  நிர்மலா சீதாராமன், மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை இழந்துவிட்டதாக தெரிவித்தார். விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து பிரதமர் மோடி மிகவும் வருத்தமடைந்ததாகவும், அந்த துக்கத்தில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் தம்மை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். தற்போது பிரதமர் சார்பாகவும், மத்திய அரசு சார்பிலும் அஞ்சலி செலுத்தியுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

விஜயகாந்த் இளகிய மனம் படைத்தவர். தனக்கு கிடைக்கும் வசதிகள், தன்னுடன் இருப்பவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தவர் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கஷ்டத்தை உணர்ந்த மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியை பார்ப்பது அரிது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விஜயகாந்த் நம்மிடம் இல்லை. துக்கத்தை வெளிப்படுத்த  வார்த்தைகள் இல்லை.  விஜயகாந்த் தொண்டர்களுக்கு எனது துக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

மனித நேயம் மிக சிறந்த அரசியல் தலைவரை  இழந்து விட்டோம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் விஜயகாந்தின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Tags: Nirmala Sitharaman pays tribute to Vijayakanth!dmdkvijaykanthpremalathaFinance Minister Nirmala Sitharaman
Share
Tweet
SendShare
Previous Post

பயனற்ற பொருட்களை விற்றதில் மத்திய அரசுக்கு ரூ.1,163 கோடி வருவாய்!

Next Post

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Related News

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies