பெங்களூரு: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ் பெங்களூருவில் வயதான பெண்ணின் வீட்டு ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிசிபி (Central Crime Branch) போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ், போலி கடன் வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை சிசிபி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் ஒரு பெண்ணின் சொத்துக்களை விற்க உதவுவதாக உறுதியளித்து ஒரு வீட்டின் உரிமைக்கான ஆவணங்களைப் பெற்று, அவருக்குத் தெரியாமல் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி 3.85 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று கடனைப் பெற்றதாக Tv9 கன்னடம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அபிலாஷிடம் 2வது முறையாக சிசிபி விசாரணை நடத்த உள்ளது
கடன் தொகையில் இருந்து ரூ.1 கோடி அபிலாஷ் பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக சிசிபி அதிகாரிகள் முன்பு ஆஜரான அபிலாஷ், விசாரணையின் போது அவர்களுடன் ஒத்துழைக்கவில்லை. அவரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிசிபி போலீசார் அவருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஜே.பி.நகரில் வசிக்கும் அம்புஜாக்ஷியை அணுகி, வீட்டை விற்க உதவுவதாக உறுதியளித்து அவரது வீட்டு ஆவண நகல்களை பெற்றதாக கூறப்படுகிறது.
தனது வீட்டு ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் வாங்கப்பட்டதை அறிந்த அந்த பெண், சந்தேக நபர்கள் மீது புட்டனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடன் தொகை, அபிலாஷ் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள மிதுன் உள்ளிட்ட அபிலாஷின் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேகபடும் நபர்கள் கடன் மூலம் பெற்ற தொகையை செலவழித்ததாகவும், நிறுவனத்தின் கணக்கில் ரூ.60 லட்சம் மட்டுமே மீதம் இருப்பதாகவும் கன்னட தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.