மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை (10 மில்லியன்) தாண்டியுள்ளது. குற்றவியல் சட்டங்களை மாற்றியமைக்கும் மூன்று சட்டங்கள் உட்பட சில முக்கிய மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் சமூக வலைதளத்தின் எண்ணிக்கை உயர்வைக் கண்டதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
பாஜக கட்சியின் முக்கிய தலைவரான அமித் ஷா, X இல் 34.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களையும், இன்ஸ்டாகிராமில் 10.7 மில்லியனுக்கும், பேஸ்புக்கில் 15 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். மேலும் அவர், பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு சமூக ஊடகங்களில் அதிகம் பின்தொடரும் அரசியல்வாதி ஆவார்.
2014 ஆம் ஆண்டு பாஜக தலைவராக ஆன பிறகு, அமித் ஷாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், முதல் முறையாக மோடியை பிரதமர் முகமாக கொண்டு மக்களவையில் தனிப்பெரும்பான்மையாக பாஜக வெற்றி பெற்றது.
2019 இல் பாஜக கட்சி அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. 2019 இல் பிரதமர் மோடி அமைச்சரவையில், மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா பெறுப்பேற்றார். அவர் 370 வது பிரிவை ரத்து செய்தல், உள்ளிட்ட அரசாங்கத்தின் மிக முக்கியமான கருத்தியல் நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.