கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பிரபல நகை கடையில் 54 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை, கடை ஊழியர்கள் மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியில் உள்ள பிரபல நகை கடையில் ஏராளமான ஊழியர் வேலை பார்த்து வருகின்றனர். இந்தநிலையில் ஒரு ஷோகேஸில் இருந்த தங்க நகைகள் குறைவாக இருந்ததை கடை உரிமையாளர் கண்டுபிடித்தனர்.
பின்னர் ஊழியர் யாருக்கும் தெரியாமல் நகைகளை பரிசோதனை செய்த போது தங்க நகை, வெள்ளி நகைகளும் மாயமாகி இருந்தது, அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பார்க்கும் போது விற்பனையாளரக பணிபுரிந்த சிதறால் பகுதியை சேர்ந்த அனிஷ் (29) என்பவர் எடுத்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. ஒரு கட்டத்தில் அனீஷ் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆடம்பரமாக புதிய வீடு கட்டியதை உரிமையாளர் மார்த்தாண்டம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் காவல்துறையினர் அனிஷை மார்த்தாண்டம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் அங்கு பணிபுரியும் இரு பெண் ஊழியர்கள் உடந்தையுடன் சிறுக சிறுக கொள்ளையாடித்ததை அவர் ஒப்பு கொண்டார். தொடர்ந்து திருடிய நகை குறித்து மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.